பாதிக்கப்பட்டவர்:
அவர் பெயர் செல்வசிந்தாமணி, சோழர்களால் பிறந்தவர். வயது பல நூறு ஆண்டுகள். இவர் தற்போதுள்ள கோவையின் மத்தியில், வாழ்ந்து வருகிறார். இவரில் 8.5 கோடி லிட்டர் தண்ணீரய் சேமிக்க முடியும். இவர் தன் வாழ்வின் முந்தைய காலங்களில் செழிப்புடனும் , வளத்துடனும் வாழ்ந்ததாகவும்…மக்களுக்கு பல உதவிகள் செய்ததாகவும் கூறப்படுகிறது. சுத்தமான நீருடன், வளம் சேர்த்த இவருக்கு நடந்தது என்ன?!!
நடந்தது என்ன?:
ஒளி தரும் மெழுகு உருகுவதும், உதவும் கரங்கள் வெட்டப்படுவதும் மனிதர்களின் நியதி ஆகிவிட்டது. அதிலிருந்து தப்பும் அதிர்ஷ்டம் பாவம் செல்வசிந்தமணிக்கு வாய்க்கவில்லை. இவருக்கு நடந்த கொடுமை என்ன? . நாம் செழிப்பதற்கு நீர் அளித்தவரில், இன்று ஓடுவது தொழிற்சாலைக் கழிவுகள்; பசும்பாயிர்கள் நாம் பார்க்க உதவியவற்கு அழிகப்பட்ட மகுடம் நெகிழிப் பைகள்; உணவளித்து உயிரளித்தவற்கு தரபட்டது வீட்டு குப்பைகளும் மனிதக் கழிவுகளும் தான் இன்று ஓடுவது நிரல்ல.. அவர் வடிக்கும் ரத்தக்கண்ணீர்.
உடைக்கப்பட்ட சட்டம்:
சட்டங்கள் உருவாக்க பட்டவர்களுக்கு மட்டுமே உதவும் அவலமும்…நிரபராதிகளுக்கு நீதி மறுக்கப்படும் நிலைமையும் இன்று யதார்த்தமாகி விட்டது.
Wetland (Conservation and Management) Rules, 2010, பகுதி நான்கை (iv,vi,x) மீறும் வகையில், செல்வசிந்தாமணியில் சிறுவாணி சாலை ஆக்கிரமிப்பு நடந்துள்ளது, மேலும் இவரை குடிசைகளும் விவசாய நிலங்களும் ஆக்கிரமித்துள்ளன. இருந்தும் நடவடிக்கை ஒன்றும் எடுக்கப்படவில்லை, அதை மக்களும் கண்டுகொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.
குற்றவாளி:
இந்த நன்றிகெட்ட கொடூரம் நிகழ்த்தப்பட்டது, படித்தவர்கள் …நாகரீகம் வளர்ப்பவர்கள் எனும் பேரில் வாழும் இன்றைய கால மனிதர்கள் நாம் தான். வாட்ஸாப்பில் காட்டும் ஆர்வத்தை நம் வாழ்வதரத்தில் நாம் காட்டுவதில்லை; ஆடம்பரத்திற்கும் அஸ்திவாரத்துக்கும் உள்ள வேறுபாடை நாம் மறந்து விட்டோம். உயிர்களை கொல்வது மட்டும் குற்றமல்ல..உயிரளிக்கும் செல்வசிந்தாமணி போன்றவர்களை அழிப்பதும் மகா பெரிய குற்றமே. நாம் சிறிதாக எடைபோடும் இக்குற்றம் , நிரலை விளைவாக(ripple effect), நமக்கே ஆபத்தாக நிற்கும் என்பதே சத்தியம்.
புகார் அளித்தவர்கள்:
இவரை சார்ந்திருக்கும் பல பறவைகள்..தவளைகள்,பாம்புகள், பட்டாம்பூச்சிகள். அவர்களுள் குறிப்பிட பட வேண்டியவர்கள்…மஞ்சள் மூக்கு நாரை,கூழைக்கிடா,நாரை,எரும்புப் பறவை,மண் பறவை போன்றவர்கள் தான். மனிதர்களுக்கே நீதி மறுக்கப்படும் இக்காலத்தில் வயிலாத இவர்களின் கூப்பாடு கேட்கப்போகிரதா என்ன?
தண்டனை:
இயற்கை பொறுமை உடையது ஆனால் பொறுப் புள்ளது, தவறுகள் தண்டிக்க படும்..அதண்டனை சரிசெய்ய முடியாத அழிவை தரும் . அதற்கு முன் அவை சொல்லும் பரிகாரங்களை நாம் செய்வதே அறிவுடைமை. செல்வசிந்தமணி போன்றவர்களை தூரவாருவோம், கழிவுகளை முறையாய் அகற்றுவோம், நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நன்றியம் மரியாதையும் செலுத்துவோம். விதிகளை கடைபிடிப்போம், எதிர்காலத்தை காக்க வேண்டிய மிகப்பெரும் பொறுப்பை உணர்வோம். இங்கு தன்னார்வத் தொண்டர்கள் சுத்தப்படுத்தவும்,விழிப்புணர்வு ஏற்படுத்த சுவர் சித்திரங்கள் வரையவும்..பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். அச்செயல்களுக்கு நாம் முன்வந்து உதவ வேண்டும்..குறைந்த பட்சம் அவர்களுக்கு இடையூரூ செய்யாமலாவது இருப்போம். இதற்கு மேலும் இக்குற்றம் செய்பவர்களுக்கு எச்சரிக்கையாய் நாமே வாழ்ந்து காட்டுவோம்.
FORMATION OF SELVACHINTHAMANI TANK
வறண்ட வருங்காலம் தவிர்க்க நீர் நிலைகளில் களப்பணி ஆற்றுவோம்!
Volunteer for Coimbatore & her Environment with E.F.I Coimbatore
நீர்நிலைகளை பாதுகாப்போம் ! வறண்ட வருங்காலம் தவிர்ப்போம் !
– பா.ரம்யா