சென்னை எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நகரம் காலை முதல் மாலை வரை மக்கள் ஓடிக்கொண்டே இருப்பதை பார்க்கிறோம் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் இந்த நகரத்தில் சுற்றுசூழல் பற்றியும் ஏரி, குளங்கள்,ஆறுகள் இவை மாசு அடைவதை பற்றியும் சிந்திக்க நேரமில்லை இவ்வளவு ஏன் பேருந்தில் பயணம் செய்யும் போது பல ஏரி, குளங்களை கடக்கும் போது கைக்குட்டை எடுத்து மூக்கில் வைத்து கொண்டு தான் அதனை கடந்து செல்கிறோம் .
ஏன் இப்படி துர்நாற்றம் வீசுகிறது?
ஏரியில் உள்ள பல்லுயிர்களின் நிலை என்ன ?
நீர்நிலைகள் பற்றிய புரிதல் என்ன?
இது போன்ற பல கேள்விகளை பற்றி சிந்தித்தது உண்டா!
சிந்திப்போம் சீர்செய்வோம் ஏரி,குளங்களை:
சென்னையின் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அதிகமாக உள்ள சாலை (ஓ .எம் .ஆர் ) இங்கு சோழிங்கநல்லூரில் சுமார் 26 ஏக்கர் பரப்பளவில் தாமரைக்கேணி ஏரி என்ற நீர்நிலை உள்ளது.சோழிங்கநல்லூர் ஏரி வரைபடம்
சென்னையின் அசுர வளச்சியின் மூலம் இந்த ஏரியின்நீர்ப்பாசன இடங்கள் தரிசு நிலமாகவும்,கட்டிடமாகவும் மாறி முப்போகம் விவசாயம் நின்றுபோனது பல உயிரினங்கள் இடம்பெயர்ந்து சென்றது காலப்போக்கில் குப்பை கொட்டுதல் ,மலம் கழித்தல் போன்ற செயல்களுக்கு பயன்படுத்தி வந்த இந்த நீர்நிலையை மக்களுடன் இணைத்து சுத்தம் செய்ய EFI களத்தில் இறங்கியது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் வார இறுதி நாட்களில் தன்னார்வ சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு சுமார் மூன்று டன் நெகிழி(பிளாஸ்டிக் ) அகற்றப்பட்டது.தன்னார்வலர்கள் மூலம் சுத்தம் செய்தல்
அறிவியல் பூர்வமான புனரமைப்பு:
சோழிங்கநல்லலூர் தாமரைக்கேணி ஏரியை அறிவியல் பூர்வமாக EFI புனரைமைத்து வருகிறது. பொதுப்பணித்துறை முழு ஒத்துழைப்புடன் மக்களுடன் இணைந்து புனரமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது.
பணியின் விவரங்கள்:
1.முட்புதர்கள் நீக்குதல் (நாட்டு மரங்களை தவிர்த்து)
பயன்கள்:ஏரியின் உட்புறம் உள்ள தேவை இல்லாத முட்புதர்கள் அகற்றுவதில் மூலம் நீர் பிடிப்பு கொள்ளளவு அதிகமாக்கப்படுகிறது தண்ணீரின் மாசுபடுதலையும் இதனால் தடுக்க முடியும்.
2.பழைய கரைகளை பலப்படுத்துதல்
பயன்கள்: பலவீனமான பழைய கரைகளை பலப்படுத்துவதின் மூலம் மழைக்காலங்களில் தண்ணீர் அளவு அதிகமானாலும் கரை உடைப்பு தவிர்க்கப்படும்.
3.புதிய கரைகளை ஏற்படுத்துதல்
பயன்கள்: ஏரியின் கரை இல்லாத பகுதிகளில் புதியதாக கரைகளை உருவாக்குவதில் மூலம் ஆக்கிரமிப்பு தவிர்க்கப்படுகிறது இதன் மூலம் ஏரியின் எல்லைகள் வரையறுக்கப்படுகிறது.
4.கரைகளில் மண் அரிப்பை தவிர்க்க வெட்டிவேர் நடவு செய்தல்
பயன்கள்: புதியதாக போடப்பட்ட கரைகளில் மண் அரிப்பை தடுக்க இயற்கையான முறையில் வெட்டிவேர் செடிகள் நடப்பட்டுள்ளது. இந்த புல் வகை வளர்வதின் மூலம் அதன் வேர்கள் மண் அரிப்பை தடுக்கிறது.
5.நாட்டு மரக்கன்றுகள் வைத்தல்.
பயன்கள்: நமது தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப நமது நாடு மரம் கன்றுகள் வைத்து பராமரிப்பதன் மூலம் சுற்றுசூழல் பாதுகாக்கப்படுகிறது.
6.நீர் வரத்து போக்கு கால்வாய் சரிசெய்தல்
பயன்கள்: ஏரிக்கு முக்கியமானது நீர் வரத்து கால்வாய் இது சுத்தமாக இருந்தால் தான் ஏரிக்கு நீர் வரும் இதன் மூலம் மழை நீரை ஏரியில் சேமிக்க முடியும்.போக்கு கால்வாய் ஏரியின் உபரி நீர் செல்வது ஆகும் ஏரியில் நீர் நிரம்பியது வெளியேறி அடுத்த நீர்நிலைக்கு செல்லும்.
7.G வடிவில் கரை ஏற்படுத்துதல்
மழைக்காலங்களில் ஏரி நிரம்பிவிடும் முழுவதும் நீர் சூழ்ந்து இருக்கும் இந்த நேரங்களில் பறவைகள் உக்காரவும்,கூடுகட்டவும் ஏதுவாக G வடிவில் கரைகள் ஏற்படுத்தப்படுகிறது.
8.பாதுகாப்பான வேலி அமைத்தல்.
குப்பை கொட்டுதல்,வாகனங்ள் ஏரியின் உள்ளே செல்லுதல் போன்றவற்றை தடுக்க முடியும் மரங்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
இது போன்று அறிவியல் பூர்வமாக புனரமைத்து பராமரித்து பாதுகாத்து வருகிறது .