சென்னையின் குறுக்கே பாயும் மூன்று ஆறுகளில் மிகவும் நீளமான அகலமான ஆறு கொசஸ்தலையாறு. இத்தகைய ஆற்றுப்படுகையில் அமைத்திருக்கும் நிறைய தொழிற்சாலைகளும் வானளாவிய புகைபோக்க்கிகளின் நடுவே அமைந்திருக்கும் கிராமம் மீஞ்சூர். ஒரு ஆறு ,பத்திற்கும் மேற்பட்ட குளங்கள் என்று தண்ணீருக்கு எப்போதும் பஞ்சமில்லா ஒரு நீர் நிறைவு பகுதியாகவே இருந்து வந்தது. இங்கு இருக்கும் முக்கியமான நீர்நிலைகளில் ஒன்று தான் வரதராஜ பெருமாள் கோவில் குளம். மிகவும் சுத்தமான நீர் இங்கு கிடைப்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் மிக முக்கிய குடிநீர் ஆதரமாகவே திகழ்ந்துள்ளது. கால போக்கில் பராமரிப்பின்றி அந்த குளம் ஆக்கிரமிக்கப்பட்டு, கழிவு நீரால் நிரப்பப்பட்டு,டன் கணக்கில் குப்பைகளால் மூடப்பட்டுள்ள ஓர் குளமாக மாறிற்று.

“இந்த குளம் எப்படி இருந்தது தெரியுமா?” என்ற கேள்வியை கேட்டு ” கமல் நடித்த குமாஸ்தாவின் மகள் படத்தில் காலம் செய்யும் விளையாட்டு என்ற பாடலில் வரும் பார்” என்றும் அப்பகுதி மக்கள் எல்லோரும் கூறுகின்றனர். அது மட்டும் அல்லாமல் இந்த குளத்தில் ஒரு காப்பாளர் இருந்ததாகவும் அவர் இருக்கும் வரை இந்த குளத்தில் யாரும் குப்பை ,எச்சில் துப்பினாலோ கடுமையாக திட்டுவார் என்றும் கூறினார்கள். அவருக்கு பின் யாரும் இந்த குளத்தில் மீது அக்கறை இல்லாமல் இருந்தது குளத்தை பார்க்கும் போதே தெரிந்தது.

இரண்டு வருட முயற்சிக்கு பின் இந்த வருட மே மாதம் இந்து அறநிலைய துறையின் அனுமதி பெற்று குளத்தை நாங்கள் (Environmentalist Foundation of India) ) தூர்வார தொடங்கினோம். முதற்கட்டமாக குளத்தில் உள்ள தண்ணீரை தொடர்ந்து இருபது நாட்கள் இரவும் பகலுமாய் மோட்டாரை இயக்கி தண்ணீரை வெளியேற்றினோம்.பிளாஸ்டிக் கழிவு நிரம்பியுள்ளதால் அதை அகற்ற அருகில் உள்ள சந்திரா பிரபு ஜெயின் கல்லூரி மாணவர்கள் முன் வந்தனர். பின்பு மக்கள் மற்றும் இளைஞர்களை தாமாக முன்னவந்தனர். குளத்தில் உள்ள எல்லா மக்காத கழிவுகளை அகற்றியாயிற்று.குளத்திற்குள் நடந்தாலும் கால்கள் உள்ளே இறங்கா வண்ணம் காய்ந்திருந்தது.மேல்கூறியவற்றை செய்து முடிப்பதற்குள் ஒரு மத காலம் கடந்துவிட்டது.
தூர்வாரும் இயந்திரத்தை இறக்கி தூர் வாரும் பணியை தொடங்கினோம். தூர்வாரும் இயந்திரத்தை (ப்ரோகில்லைன் – 200) இறக்கி நான்கு பகுதிகளில் மண் அடுக்குகளை சோதனை செய்தோம், எல்லா பகுதிகளிலும் ஐந்து அடி வரை கலிமண்னே காணப்பட்டது. இது எங்கள் பணியை மேலும் சிரமம் ஆகியது. கடந்த இருப்பது ஆண்டுகளாக கழிவு நீரால் நிரப்பப்டே இருந்ததால் இந்த குளத்தில் இயந்திரம் உள்ளே புதைந்து விடும் அபாயமே இருந்தது. நான்கு பக்கங்களில் இருந்து களிமண்ணை கரைகளுக்கு அடித்தளமாக அமைத்தோம் அப்டியே களிமண்ணை காய வைத்தோம். நான்கு பக்கத்திலும் அடித்தளம் அமைப்பதிற்குள் மண் காய்த்தது. குளத்தின் நடுப்பகுதி மண்ணை எடுத்து இரண்டாம் அடுக்கு உருவாக்கினோம். இவ்வாறு படிப்படியாய் குளத்தில் உள்ள களிமண்ணை கரையாக அமைத்து வந்தோம். தற்போது இந்த குளத்தில் பெரும்பகுதி வேலை முடிந்த நிலையில் முதர்மழை சுத்தமான தண்ணீரை குளத்தில் விட்டு சென்றுள்ளது.

இந்த குளத்தை மக்களே தாமாக முன்வந்து பாதுகாக்க வேண்டும்,பொதுமக்கள் அனைவரும் இந்த குளத்திற்கு ஒரு காவலாளி ஆகா மாறவேண்டும் என்றும் இது வரை ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி கூறும் விதத்தில் மீஞ்சூர் மக்கள் அனைவரையும் அழைத்து அன்னதானம் ஏற்பாடு செய்தோம். முன்னூற்றி ஐம்பது பேர் அன்னதானத்தில் கலந்து கொண்டு இந்த குளத்தில் குப்பைகொட்டமல் பார்த்துக்கொள்வேன் என்றும் உறுதி அளித்தனர்.
இந்த குளத்தை தூர்வார தூண்டுதலாக இருந்தது அப்பகுதி இளைஞர் திரு.ராகவ். ஆரம்பம் முதல் கடைசி வரை மிகவும் உறுதுணையாய் இருந்து குளத்தை சீர்செய்து குளத்தை சீரமைப்பதையே ஒற்றை இலக்காய் வைத்து எங்களுடன் தொடர்ந்து பயணித்து உறுதுணையாய் இருந்தார் . அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

மேற்படி இந்த குளத்தில் கரைகளை பலப்படுத்த வெட்டிவேர்,அருகம்புல் வகைகளை நட உள்ளோம். வாரம் ஒரு முறை தண்ணீர் ஊற்றி பராமரிப்பு பணியும் செய்ய உள்ளோம் நேரம் உள்ள தன்னார்வலர்கள் திரு.ராகவ் (9551991525) அவர்களை அழைக்கவும்