மென்பொருள் நிறுவனங்கள் பல நிறைந்துள்ள பழைய மஹாபலிபுரம் சாலையில் எண்ணற்ற நீர் நிலைகள் உள்ளன. இவற்றில் ஏரி, குளம், குட்டை, ஓடைகள் என எத்தனையோ இருக்கின்றன. நகரமயமாக்கலின் தாக்கத்தினால் இந்த நீராதாரங்கள் இன்று கேட்பாரற்று இருக்கின்றன. இதனால் இந்த நீர் நிலைகளில் குப்பை கொட்டப்படுவதும், கட்டிடக்கழிவுகள் கொண்டு நிரப்புவதும் என எத்தனையோ பிரச்சனைகள். இயற்கை ஆர்வம் கொண்டு, நீர் ஆதாரங்களை காக்கும் முயற்சியில் பல மக்கள் ஈடுபட்டுள்ளன. அப்படி தாழம்பூர், ஈகாட்டூr பகுதி மக்கள் E.F.I எனும் இயற்கை பணியில் ஈடுபட்டுள்ள தனியார் தொண்டு நிறுவனத்துடன் இனைந்து இந்த பகுதி குளங்களை சுத்தம் செய்து, அறிவியல் பூர்வமாக புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
தாழம்பூரில் குப்பைமேடாக இருந்த குளத்தை சுத்தம் செய்து, தூர்வாரி, ஆழப்படுத்தி, கறைகளை பலப்படுத்தி, மரக்கன்றுகள் நட்டு அதை ஒரு நீர் ஆதாரமாக மீட்டெடுக்கும் பனி முழுவீச்சில் நடந்தேறிவருகிறது. அது மட்டும் இன்றி ஏகாட்டூரில், பக்கிங்காம் கால்வாய் அருகில் உள்ள மூன்று குளங்களில், முதல் குளத்தில் உள்ளூர் மக்களின் ஈடுபாடுடன் குளத்தை சுத்தம் செய்து மீட்டெடுக்கும் பனி 12-ஜனவரி அன்று தொடங்கியது. குலம் காக்கும் குளத்தில் பொங்கல் என்ற தலைப்புடன் சுமார் 80 உள்ளூர் மக்கள் E.F.I இன் அழைப்பை ஏற்று குளத்தில் காட்டப்பட்டுள்ள நெகிழி குப்பைகளை அகற்றும் பணியில் சுமார் 3மணி நேரம் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து, கனரக இயந்திரங்கள் கொண்டு குளத்தை அறிவியல் பூர்வமாக புனரமைக்கும் பனி தொடங்கியது. சுமார் 45 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த பணிகள் முடிந்த பின்பு இந்த குளம் ஒரு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும்.
இது போன்ற பணிகளில் உங்களை ஈடுபடுத்தி கொள்ள:
தொடர்புகொள்ளுங்கள் 95000 47657 – management@indiaenvironment.org
Volunteer for India & her Environment with E.F.I, Jai Hind.