India, one of the oldest civilizations is a land of evolutionary knowledge. Environmentalist Foundation of India (E.F.I) through this series brings to focus literature related to water from ancient India. Telugu, Tamil to Marathi, Garo, Odiya to Punjabi, languages in this country have nomenclature for nature reserves that imply so much more than just for naming.
We start the series with an interesting Tamil Name for water bodies, Ilanji.
ilanji refers to a reservoir established to cater to drinking water needs or other daily purposes.
நீர் ஆதாரங்களுக்கு தமிழ் மொழியில் பல்வேரு பெயர்கள் உண்டு. நீர் ஆதாரத்தின் பயன்பாட்டின் படி மற்றும் அதன் அமைப்பின் படி பெயர்கள் மாறுவது உண்டு.
இன்று நாம் தெரிந்து கொள்ளவிருக்கும் நீர் ஆதார பெயர் ‘இலஞ்சி’

குடிநீர், தினசரி பயன்பாடு என பல காரியங்களுக்கு பயன்படும் நீர் தேக்கப்படும் பகுதி இலஞ்சி என அழைக்கப்படுகின்றது. இயற்கையாகவே உருப்பெற்றோ அல்லது தேவைகளை கருத்தில்கொண்டு மனிதர்களால் உருவாக்கப்படும் ஆதாரங்கள் இவை.
நெல்லை மாவட்டத்தில் குற்றாலம் அருகே இலஞ்சி என்ற ஊர்கூட உண்டு. பச்சை கம்பளம் விரித்து, அதில் நீல வண்ண ஓடை வரைய பட்டதுபோல் காட்சியளிக்கும் ஊர் அது.
உங்கள் ஊரில் இருக்கும் இலஞ்சியை தேடி செல்லுங்கள். இலஞ்சி என்ற நீர் ஆதரப்பெயரை நினைவில் வைப்போம், நீர் இன்றி அமையாது உலகு என்பதை மனதார உணர்வோம்.